உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறைகேட்பு கூட்டம் 725 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம் 725 மனுக்கள் குவிந்தன

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 725 மனுக்கள் பெறப்பட்டன. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கை பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையும், தாட்கோ சார்பில் முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு, சரக்கு வாகனம், ஆட்டோ வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., அரிதாஸ், தனித்துணை கலெக்டர் முகுந்தன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை