குறைகேட்புக் கூட்டம்
விழுப்புரம்; விழுப்புரத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பு:கூட்டுறவு துறை அமைச்சரால் அறிவித்தபடியும், கூட்டுறவு பதிவாளரின் உத்தரவின்படியும், விழுப்புரம் மண்டலத்தின் 5வது பணியாளர் குறைகேட்புக் கூட்டம் நேற்று முன்தினம் விழுப்புரம் கூட்டுறவு சங்க மண்டல அலுவலகத்தில் நடந்தது.மண்டல இணைப் பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் மற்றும் விழுப்புரம், திண்டிவனம் சரக துணை பதிவாளர்கள் ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்க பணியாளர்கள், தங்களின் குறைகள், கோரிக்கை குறித்த மனுக்களை அளித்தனர்.முகாமில் பெறப்பட்ட 36 மனுக்களும், கூட்டுறவு துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்தும், விதிகளின் படி விரைந்து தீர்வுகாணவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.