உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறைகேட்பு கூட்டம் 424 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம் 424 மனுக்கள் குவிந்தன

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 424 மனுக்கள் பெறப்பட்டது.கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா கோருதல், பட்டா மாறுதல், கடனுதவி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 424 மனுக்கள் பெறப்பட்டது.பொதுமக்களிடம் பெறப்பட்ட முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்கள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என துறை அலுவலர்களிடம் டி.ஆர்.ஓ., அறிவுறுத்தினார்.கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, தனித் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்கொழுந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை