உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குரூப் 2 இலவச மாதிரி தேர்வு

குரூப் 2 இலவச மாதிரி தேர்வு

விழுப்புரம்; விழுப்புரத்தில் வரும் 20ம் தேதி குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில், அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வரும் 20ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை