உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம், : வளவனுார் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் குமளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு கடை வீதியில் வாதானுாரைச் சேர்ந்த ராஜவேலு, 39; என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அங்கு, விற்பனைக்காக குட்கா வைத்திருந்தது தெரியவந்தது.உடன், ராஜவேலு மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி