மேலும் செய்திகள்
டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
24-Jul-2025
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது. மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். சம்மேளன குழு உறுப்பினர் ஐயப்பன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன் சங்க கொடி ஏற்றி வைத்தார். துணை செயலாளர் சுரேஷ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பொதுச்செயலாளர் குமார் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் ஏழுமலை, வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். மாநில தலைவர் வெங்கடாபதி தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி, தலைவர் முத்துக்குமரன், பொருளாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர். மாநில செயலாளர் அருள்குமார் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்; தனி நல வாரியம் அமைக்க வேண்டும்; பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
24-Jul-2025