உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரவிந்தரின் பிறந்த நாள் விழா ஆரோவில்லில் உயர்மட்ட கூட்டம்

அரவிந்தரின் பிறந்த நாள் விழா ஆரோவில்லில் உயர்மட்ட கூட்டம்

வானூர் : அரவிந்தரின் பிறந்தநாள் விழாவையொட்டி, ஆரோவில் அறக்கட்டளை, புதுச்சேரி அரசு இணைந்து செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் குறித்த உயர்மட்ட கூட்டம் நடந்தது.புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் சர்வதேச நகரம் ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, அரவிந்தரின் பிறந்த நாள் விழாவை ஆரோவில் நிர்வாகம் தொடர்ந்து கொண்டாடி வருவதோடு, பல்வேறு திட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. அரவிந்தரின் 150 வது பிறந்ந நாளையொட்டி, ஆரோவில் அறக்கட்டளையும், புதுச்சேரி அரசும் இணைந்து நடத்த இருக்கும் பல்துறை திட்டங்கள் குறித்த உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி தலைமைச் செயலாளர் ஷரத் சவுகான், அரசு செயலாளர் முத்தம்மா, ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி சீதாராமன், கலாசார மற்றும் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மல்லிகா கங்குலி, சிந்துஜா, அருங்காட்சியக திட்டத்தை செயல்படுத்த இருக்கும் டாக்டர் பூஜா கலந்து கொண்டனர். இத்திட்டம் மூலம் அரவிந்தர், அன்னை மற்றும் ஆரோவில்லின் வாழ்க்கை மற்றும் பணிகளை மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் பொது மக்களுக்கு எடுத்து செல்ல உள்ளனர். இக்கூட்டத்தில் தேசிய அறிவியல் அருங்காட்சிய குழு சாஜூ, கலாசார அமைச்சக ராஜிவ் குமார் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்றனர். அரவிந்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை புதுமையான முறைகளை கையாண்டு அதிகபட்ச மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ