உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  உயர்கோபுர மின் விளக்கு: எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

 உயர்கோபுர மின் விளக்கு: எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

செஞ்சி: வினாயகபுரத்தில் உயர்கோபுர மின் விளக்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சி அடுத்த ஜெயங் கொண்டான் ஊராட்சி விநாயகபுரத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. மின் விளக்கை இயக்கும் நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் லட்சுமி சுப்ரமணியன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., மின் விளக்கினை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் துரைராஜன், மேல் எடை யாளம் ஊராட்சித் தலைவர் செல்வி செல்வமணி, ஊராட்சி துணைத் தலைவர் தேசிங்கு, ஒன்றிய நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை, கோடீஸ்வரன், மேனகா சரவணகுமார், அண்ணாதுரை செந்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை