இந்தி தின விழா விழுப்புரம்
விழுப்புரம் : விழுப்புரம் தி நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின் தலைமை தாங்கினார். சபா அகாடமி நிறுவனர் பிரீத்தா, மாணவர்களுக்கு இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், 'கடந்த 2019-25ம் ஆண்டு வரை, பள்ளி பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது. மாணவர்கள் இந்தியில் புலமை பெற்றுள்ளனர், ' என்றார். பின், தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் பரிச்சயா மற்றும் பிராத்மிக் தேர்வு நடைபெற்றது. இதில், 88 மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும், வென்று சாதனை படைத்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் தங்களின் இந்தி மொழித்திறனை வெளிப்படுத்தினர். முதல்வர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.