அமைச்சரை கண்டித்து ஹிந்து எழுச்சி பேரவை ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடியை கைது செய்ய கோரி, ஹிந்து எழுச்சி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். பொது செயலாளர் சதீஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரபு வரவேற்றார். தர்மகுரு கருடானந்தா சுவாமிகள், பா.ஜ., கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் விஜயலட்சுமி கண்டன உரையாற்றினர்.அமைச்சர் பொன்முடியை கைது செய்வதுடன், அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் கமல் சரவணன், பல்லவ மண்டல தலைவர் பம்மல் சிவா, அமைப்பாளர் சரவணன், மாநில செயலாளர் ஜெயஸ்ரீ தேவன், இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ்வரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விக்கிரவாண்டி தொகுதி அமைப்பாளர் விமல்ராஜ் நன்றி கூறினார்.