மேலும் செய்திகள்
ஹோலி ஏஞ்சல் பள்ளிக்கு சி.இ.ஓ., பாராட்டு
09-May-2025
மயிலம் : ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்று தந்துள்ளனர். 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி 489 மதிப்பெண், சுவேந்ரா, சாந்தலட்சுமி 488, பவித்ரா 487 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களை பிடித்தனர்.கணிதத்தில் 5 பேர், அறிவியலில் 28, சமூக அறிவியலில் ஒரு மாணவர் என 34 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பிளஸ் 1 தேர்வில் மாணவி லீலாவதி 600க்கு 573 மதிப்பெண், அர்ச்சனா 569, பிரதிக்ஷா 561 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வில் மாணவி சுனிதாசிங், மாணவர் ராஜதுரை 587, ரோஷினி 585, தாரணி 583 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., தேர்வில், மாணவி கீர்த்தனா 500க்கு416, மேகலா 408, மாணவர் ஸ்ரீதரன் 404 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். 7 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் மாணவர் கோகுலகிருஷ்ணன் 500க்கு460, பரத் 441, மாணவி பவித்ரா 435 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். 15 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்க மேல் பெற்றுள்ளனர்.சிறப்பிடம் பிடித்த மாணவர்களை, பள்ளி தாளாளர் பழனியப்பன்,முதுநிலை முதல்வர் அகிலா, ஹோலி ஏஞ்சல் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை இயக்குநர் கீர்த்திவாசன்,சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஈரோமிஸ் பிஸ்கட் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
09-May-2025