உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள் தடகள போட்டிகளில் அசத்தல்

ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள் தடகள போட்டிகளில் அசத்தல்

மயிலம் : திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவில் நடந்த தடகளப் போட்டிகளில் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.800, 400, 200, 100 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் மாணவர்கள் தீபிகா, ஜனனி, லீலாவதி, கபிலேஷ், பிரியதர்ஷினி, ராகுல், லோகேஷ்வர், புவனேஸ்வரி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இவர்களை பள்ளியின் தாளாளர் பழனியப்பன், முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன், துணை முதல்வர் மாசிலாமணி, உடற்கல்வி ஆசிரியர் கரன்ராஜ் ஆகியோர் பாராட்டினர். மாணவர்களுக்கு மாநில அளவில் வெற்றி பெற்றதற்கான கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.பள்ளித் தாளாளர் பழனியப்பன் கூறுகையில், மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டும் முறையாக கற்பிக்கப்படுகிறது. விளையாட்டில் தலை சிறந்த மாணவர்களை பல்வேறு போட்டிகளுக்கு அனுப்பி வைத்து அவர்களை சாதனையாளராக மாற்றுவதே பள்ளியின் நோக்கம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை