மேலும் செய்திகள்
நாளை மின்தடை
17 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
17 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
17 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
17 hour(s) ago
விழுப்புரம், : விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் திடீரென இறந்ததால், உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தொரவி தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரெமிஜோஸ்,28; ஓட்டலில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜெனிபர், 27; இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெனிபர் சிகிச்சை பெற்று வந்தார்.அப்போது, ஜெனிபருக்கு கர்ப்பப்பை குழாயில் அடைப்பு இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்தால் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக கூறினர். இதையடுத்து, அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெனிபருக்கு, நேற்று முன்தினம் இரவு அறுவை சிகிச்சை நடந்தது. நேற்று காலை வரை வெகுநேரமாகியும் அவர் கண்விழிக்கவில்லை. அவர் இறந்தது தெரியவந்தது.இதையறிந்த ஜெனிபரின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டு, தவறான சிகிச்சை அளித்ததால் தான் ஜெனிபர் இறந்ததாக கூறி அவரின் உடலை வாங்க மறுத்து நேற்று காலை 11:00 மணியளவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெனிபரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்தனர். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.அதையடுத்து, ஜெனிபர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago