மேலும் செய்திகள்
மடிப்பாக்கம் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
12-Apr-2025
திண்டிவனம் :செஞ்சி அடுத்த மேல்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 45; இவர் திருப்பதியில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மனோன்மணி, 42. அய்யப்பன் கடந்த 30ம் தேதி இரவு குடும்பத்துடன் செஞ்சியில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்றவர், அங்கிருந்து கொணக்கம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக 9:30 மணிக்கு பஸ்சில் வந்தவர், கொணக்கம்பட்டு பஸ் ஸ்டாப்பில் இறங்கி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திண்டிவனம் - செஞ்சி சாலையை நடந்து கடக்க முயன்றார்.அவரது பிள்ளைகள் முன்னே சென்று விட பின்னால் சென்ற அய்யப்பன், மனோன்மணி மீது திண்டிவனத்திலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற ேஹாண்டா மொபைலியோ கார் மோதியது.இதில், படுகாயமடைந்த இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தலையில் காயமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக அய்யப்பன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Apr-2025