உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கல்

திண்டிவனம் அடுத்த நொளம்பூர், ஆட்சிப்பாக்கம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இ.என்.எஸ்.சேகர் பாடப்புத்தகம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.இ.என்.எஸ்.தமிழ்நாடு மக்கள் சேவை அன்பின் பாதை கிருஷ்ணவேணி அம்மாள் சாரிடபிள் அறக்கட்டளை நிறுவனம் சார்பில், நொளம்பூர் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. 700 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுகளும் மற்றும் 6 வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 75 பேருக்கு தலா 2,500 ரூபாயை இ.என்.எஸ்.தமிழ்நாடு மக்கள் சேவை அமைப்பின் நிறுவனர், கூழ்கூடலுார் ஊராட்சி தலைவர் ஈச்சேரி சேகர் வழங்கினார்.இதேபோல் ஆட்சிப்பாக்கம் அரசு பள்ளியில் பயிலும் 300 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், 50 மாணவர்களுக்கு தலா 1,000 ரூபாய் ஊக்கத் தொகையை, இ.என்.எஸ்.சேகர் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை