உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு மருத்துவமனையில் ஆய்வு

அரசு மருத்துவமனையில் ஆய்வு

திண்டிவனம்; அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்தா பிரிவு கட்டடத்தை, மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில், சித்தா பிரிவு கட்டடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் மழைநீர் பெய்தால் தண்ணீர் உள்ளே கசிவதோடு, சுவர்களில் இருந்தும் தண்ணீர் ஊறுகிறது. இதனால், கோப்புகள் மற்றும் மருந்துகள் சேதமடைந்து வருகிறது. தகவலறிந்த மஸ்தான் எம்.எல்.ஏ., நேற்று நேரில் சென்று அந்த கட்டடத்தை ஆய்வு செய்தார். அப்போது, கட்டடத்தை புனரமைக்கக்கோரி மஸ்தானிடம், சித்தா டாக்டர் சுபாஷினி மனு கொடுத்தார். மனு மீது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். அப்போது, கவுன்சிலர் பாபு, நகர செயலாளர் கண்ணன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், ஆடிட்டர் பிரகாஷ், வழக்கறிஞர் அசோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை