உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆடவல்லீஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறையினர் ஆய்வு

ஆடவல்லீஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறையினர் ஆய்வு

மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் ஆடவல்லீஸ் வரர் கோவில் ராஜகோபுரம் கட்டுமானப் பணியை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீஆடவல்லீஸ்வரர் கோவில் உள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 4.45 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு மற்றும் ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.இப்பணியை நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறை ஆணை யர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாக மேற்கொள்ள அறிவுறுத்தி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சிவாகரன், செயற் பொறியாளர் ஞானமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் வசந்த், ஆய்வாளர்கள் செல்வி, உமா மகேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ