மாவட்ட தி.மு.க., மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்
திண்டிவனம் : திண்டிவனத்தில் தி.மு.க., மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடக்கிறது.விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் அறிக்கை:விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஒன்றிய, நகர, பேரூராட்சி மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நாளை 25ம் தேதி நடக்கிறது.திண்டிவனம் ஜே.வி.எஸ்.திருமண நிலையத்தில் காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு, அமைச்சர் மஸ்தான் முன்னிலை வகிக்கிறார். மாநில மாணவரணி துணைச் செயலாளர்கள் அமுதரசன், தமிழரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.