மேலும் செய்திகள்
ரேஷன் பணியாளர்களாக 29ம் தேதி நேர்முகத்தேர்வு
18-Nov-2024
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 49 ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு வரும் 25ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, எண்.2, ஆஸ்பிட்டல் ரோடு, விழுப்புரம் 605602 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.நேர்முக தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று 18ம் தேதி முதல் விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.drbvpm.in/hallticket.php இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிரத்யேக தொலைபேசி எண் 04146 229854 மற்றும் gmail.comஎன்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
18-Nov-2024