உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கமலா கல்வியியல் கல்லுாரிக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கல்

கமலா கல்வியியல் கல்லுாரிக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கல்

விழுப்புரம்,; திருநாவலுார் கமலா கல்வியியல் கல்லுாரிக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே திருநாவலுாரில் கமலா கல்வியியல் கல்லுாரி கடந்த 2007ம் ஆண்டு துவங்கி செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசின் அங்கீகாரத்தை பெற்ற இக்கல்லுாரி, பல்கலைக்கழக மாநில குழுவின் 2 (எப்)அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த கல்லுாரி மத்திய அரசால் சிறுபான்மை கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது மட்டுமின்றி, நாக் சான்றிதழ் பெற்ற கல்லுாரியாக உள்ளது. இந்த கல்வி ஆண்டில் ஐ.எஸ்.ஓ., 9001-2015 என்ற தரச்சான்றை பெற்றுள்ளது. தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபையின் பேராயர் கிறிஸ்டின் சாம்ராஜ், இந்த சான்றிதழை வழங்கினார். பல்வேறு மாவட்டங் கள், மாநிலங்களில் இருந்து மாணவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தேசிய கருத்தரங்கம் மற்றும் பன்னாட்டு கருத்தரங்கம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு நடந்த செயற்கை நுண்ணறிவு பற்றிய பன்னாட்டு கருத்தரங்கில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் ராஜசேகரன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன், அண்ணாமலை பல்கலை பதிவாளர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். கிராமப்புறத்தில் அமைந்துள்ள இந்த கல்லுாரி ஒவ்வொரு ஆண்டும் தரமான ஆசிரியர்களை உருவாக்கி வருவதாக கல்லுாரி தாளாளர் பிரபாகர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை