வீடு கட்டும் ஆணை வழங்கல்
விக்கிரவாண்டி : காணை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 444 பயனாளிகளுக்கு, வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவனே சன், ஜூலியானா, மாவட்ட கவுன்சிலர் சிவகுமார், துணைச் சேர்மன் வீரராகவன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.