உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் ஜமாபந்தியில் பட்டா மாற்றல் உத்தரவு வழங்கல்

திண்டிவனம் ஜமாபந்தியில் பட்டா மாற்றல் உத்தரவு வழங்கல்

திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 547 மனுக்களில், 35 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் இந்தாண்டிற்கான ஜமாபந்தி, கடந்த 21 ம் தேதி துவங்கியது. தாசில்தார் யுவராஜ் முன்னிலையில், விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று வருகிறார்.நேற்று ஒலக்கூர் குறுவட்டத்தை சேர்ந்த 18 கிராம பொது மக்களிடமிருந்து மனு பெறப்பட்டது. கடந்த 21ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, பொது மக்களிடமிருந்து 547 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில், 35 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. நேற்றைய ஜமாபந்தியில், உடனடியாக தீர்வு காணப்பட்ட பட்டா மாற்றத்திற்கான உத்தரவை, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், பயனாளிகளுக்கு வழங்கினார். ஜமாபந்த வரும் 29ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை