மேலும் செய்திகள்
சீர் மரபினர் நலவாரிய அட்டை வழங்கல்
06-May-2025
வானுார்: வானுார் ஊராட்சி ஒன்றியத்தில் துாய்மை பணியாளர்களுக்கு, நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ துறை மூலம் நலவாரிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வானுார் ஊராட்சி ஒன்றி யத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வானுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கி, 145 துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். தாட்கோ உதவி மேலாளர் சதீஷ், தமிழ்நாடு அரசு துாய்மை பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர் கண்ணன், பி.டி.ஓ., மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
06-May-2025