உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கல்

வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கல்

அவலுார்பேட்டை; மேல்மலையனுாரில் வீடு கட்டும் திட்டங்களில் 55 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் .முதல்வரின் வீடுகள் மறு சீரமைப்பு திட்டத்தில் தலா 2.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 44 பயனாளிகளுக்கும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் தலா 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் , 11 பயனாளிகளுக்கும் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., 55 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கி பேசினார். ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சாந்தி, நாராயணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ