மேலும் செய்திகள்
பண்ருட்டி நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் சாதனை
19-May-2025
விழுப்புரம்: விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவி மெர்லின் மரியா 500க்கு 493 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்தார். மாணவி இந்து 489 மதிப்பெண் பெற்று 2ம் இடமும், மாணவி விஜயஸ்ரீ, ரம்யா ஆகியோர் 488 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். சமூக அறிவியலில் 5 மாணவிகளும், அறிவியலில் 4 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். ஆங்கிலத்தில் 5 மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். 470 மதிப்பெண்ணுக்கு மேல் 19 மாணவர்களும், 460க்கு மேல் 12 மாணவர்களும், 450க்கு மேல் 11 மாணவர்களும் பெற்றுள்ளனர். சாதனை புரிந்த மாணவர்கள்,உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியை, பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை, பள்ளி தாளாளர் வீரதாஸ் பாராட்டி, பரிசு வழங்கினார்.முதன்மை செயலர் ஷெர்லி வீரதாஸ், முதன்மை முதல்வர் எமர்சன் ராபின், முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ராபின் உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டி, வாழ்த்தினர்.
19-May-2025