சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் ஜான்டூயி பள்ளி சாதனை
விழுப்புரம்: சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் விழுப்புரம் ஜான்டூயி இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவி நந்தனா 92 சதவீதம் மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக மாணவி தேவிகா 89 சதவீதம் மதிப்பெண் பெற்றும், மாணவி சுப்ரியா 84 சதவீதம் மதிப்பெண் பெற்றும் பள்ளியில் சிறப்பிடங்களை பிடித்துள்ளனர். பாட வாரியாக, ஆங்கிலத்தில் 94 பேரும், கணிதத்தில் 86 பேரும், இயற்பியல் 89, வேதியியல் 95, கணினி அறிவியல் 82 பேரும் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.அதே போல், பத்தாம் வகுப்பில் மாணவர் சங்கீத் கிருஷ்ணன் 95 சதவீதம் மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடத்தை பிடித்தார். அடுத்ததாக மாணவர் சிவப்பிரியன் 94 சதவீதம் மதிப்பெண்களும், மாணவர் கமலேஷ் 93.8 சதவீதம் பெற்றும் சாதித்துள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும் தேர்ச்சியாகியுள்ளனர். மேலும், பாடங்கள் வாரியாக தமிழில் 99 மதிப்பெண்ணும், ஆங்கிலம் 97, கணிதம் 97, அறிவியல் 97, சமூக அறிவியல் 95 என அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.நுாறு சதவீதம் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வீரதாஸ், கல்வி நிர்வாக இயக்குனர் எமர்சன் ராபின், நிர்வாக தலைவர் வாலண்டினா லெஸ்லி, கல்வி நிர்வாக தலைவர் சுகன்யா ராபின், இணை செயலாளர் நித்தின் ஜோஸ்வா, முதல்வர் விஜயா, துணை முதல்வர் தனலட்சுமி ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.