உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு

அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம், ரகமத் கோல்டன் சிட்டியைச் சேர்ந்தவர் குமார், 55; இவர், சென்னை மாநகர பஸ்சில் கண்டக்டராக பணிபுரிகிறார். குடும்பத்தார் சென்னையில் வசிக்கின்றனர். குமார், விழுப்புரத்தில் உள்ள வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். கடந்த 13ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார். நேற்று காலை 7.00 மணிக்கு இவர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருந்ததைப் பார்த்து அப்பகுதியினர் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை