மேலும் செய்திகள்
செவிலியர் வீட்டில் நகை திருட்டு
29-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் கான்ட்ராக்டர் வீட்டில் மூன்றரை சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 48; கட்டட கான்ட்ராக்டர். இவர் குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார். பெரியார் நகரில் உள்ள வீட்டை அவரது மாமனார் மாணிக்கம் கவனித்து வந்தார். நேற்று முன்தினம் காலை மாணிக்கம், பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து உள்ளே பீரோவை உடைத்து மூன்றரை சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Oct-2025