உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பொறுப்பேற்பு

கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பொறுப்பேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் புதிய இணைப்பதிவாளர் பொறுப்பேற்றார்.விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளராக இருந்த பெரிய சாமி, தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக, திருச்செங்கோடு கூட்டுறவு சங்கங்களின் மேலாண் இயக்குனராக பணிபுரிந்த விஜயசக்தி, விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர், நேற்று விழுப்புரம் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.இவருக்கு, கூட்டுறவு துறை அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர், ஏற்கனவே திண்டி வனம் சரக துணை பதிவாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ