மேலும் செய்திகள்
மயிலம் கோவிலில் சஷ்டி வழிபாடு
23-Oct-2024
மயிலம்: மயிலம் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா நேற்று யாகசாலை வழிபாடு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது.அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தன அபிஷேகம் நடந்தது.வரும் நவம்பர் 7ம் தேதி கந்தசஷ்டி 6ம் நாள் விழாவில் இரவு 7:00 மணிக்கு பாலசித்தர் சன்னதியில் முருகன் வேல் வாங்குதலும், 8:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி சூரசம்ஹாரமும் நடக்கிறது. பின் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் கிரிவலம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
23-Oct-2024