உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  உப்பு குடிநீரால் சிறுநீரக பிரச்னை: சிறுவாடி ஊராட்சியில் மக்கள் வேதனை

 உப்பு குடிநீரால் சிறுநீரக பிரச்னை: சிறுவாடி ஊராட்சியில் மக்கள் வேதனை

சிறுவாடி ஊராட்சியில் குடிநீரில் உப்புத் தன்மை அதிக அளவில் இருப்பதால், கிராம மக்கள் சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். மரக்காணம் அடுத்த சிறுவாடி ஊராட்சியில் சிறுவாடி, முருக்கேரியில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறுவாடி, முருக்கேரி ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் மூலம் 3 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் ஏற்றப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிக அளவில் இருப்பதால், 10க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பாதிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5க்கும் மேற்பட்டோர் 'டயாலிசிஸ்' சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் குடிநீர் பிரச்னையால், ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே, சிறுவாடி ஊராட்சியில் புதிதாக குடிநீர் கிணறு அமைத்து, சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீரை துாய்மைப்படுத்தி வழங்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி