உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூளை உரிமையாளர் சாவு; போலீஸ் விசாரணை

சூளை உரிமையாளர் சாவு; போலீஸ் விசாரணை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே செங்கல் சூளை உரிமையாளர் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கோலியனுார் பகுதியைச் சேர்ந்தவர் தர்மன் மகன் பார்த்திபன், 50; செங்கல் சூளை உரிமையாளர். இவர், நேற்று காலை, சூளையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த வளவனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்திபன் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை