பெருமாள் கோவிலில் கூடாரவல்லி வழிபாடு
விழுப்புரம்; வளவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கூடாரவல்லி விழா நடந்தது.விழுப்புரம் அடுத்த வளவனூரில் உள்ள வேதவள்ளி நாயகா சமேத ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பை அடுத்து கூடாரவல்லி வழிபாடு நடந்தது. காலை 7.00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து மூலவர் பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, வேதவல்லி தாயார் உடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.