உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கவரை ஜடா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கவரை ஜடா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி : கவரை ஜடா முனீஸ்வரர் கோவில் 35ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த கவரை கிராமம் சிறுனாம்பூண்டி சாலையில் உள்ள வலம்புரி விநாயகர் ஜடாமுனீஸ்வரர், அங்காளம்மன், மாரியம்மன், கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, 35ம் ஆண்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதை முன்னிட்டு காலை 9:00 மணி முதல் 10:30 வரை ஊச்சங்காடு உப்புலம் செந்துார்முருகன் கோவில் வெங்கடாசலம் சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்படும் மகா கும்பாபிஷேகமும், மூலவர்களுக்கு மகா அபிஷேகமும் நடந்தது. பகல் 12:00 மணிக்கு அன்னதானமும், இரவு, 9:00 மணிக்கு வான வேடிக்கை, மேடை நாடகம் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அய்யனார் விழா குழு குமரேசன் சுவாமிகள், சரவணன் மற்றும் கிராம பொதுமக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி