மேலும் செய்திகள்
கும்பாபிஷேகம்
21-Aug-2025
செஞ்சி:விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி அடுத்த என்.ஆர்.பேட்டை, எட்டியம்மன் நகரில் உள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம் நடந்தது. அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால ஹோமம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை கோபூஜை, நாடி சந்தானம், 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், யாத்ரா தானமும், கடம் புறப்பாடும், 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
21-Aug-2025