உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் ராஜா, 37; கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி ஆனந்தியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ராஜா மது போதையில் சிறுவந்தாடு பாலத்தின் கட்டை மீது படுத்திருந்தபோது, தவறி கீழே விழுந்ததில், கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீடு திரும்பிய நிலையில், படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அவர், கடந்த 23ம் தேதி வீட்டிலிருந்த அவர், முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து, வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை