உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கூலித்தொழிலாளி தற்கொலை

 கூலித்தொழிலாளி தற்கொலை

கோட்டக்குப்பம்: விபத்தில் காயமடைந்து வலியால் அவதியடைந்த கூலித்தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டக்குப்பம் அடுத்த மாத்துார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன், 55; கூலித்தொழிலாளி. இவர், ஓராண்டிற்கு முன் விபத்தில் சிக்கி இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார். இருப்பினும், குணமடையாமல் வலி இருந்தது. நேற்று முன்தினம் மாலை வலியால் அவதிப்பட்ட அவர் மனமுடைந்து, அப்பகுதி ஏரிக்கரைக்கு செல்லும் வழியில் உள்ள மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை