மேலும் செய்திகள்
கல்லால் தாக்கப்பட்டவர் சாவு கொலை வழக்காக மாற்றம்
18-Feb-2025
கண்டமங்கலம்: ஏரி குத்தகைதார்களிடையே ஏற்பட்ட தகராறில் 3 பேரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கண்டமங்கலம் அடுத்த பள்ளிநேலியனுாரை சேர்ந்தவர் பிரபாகரன், 25; இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், 25; உட்பட 10 பேர் சேர்ந்து அங்குள்ள ஏரியை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன், ஏரியில் மீன் பிடித்துள்ளார். இதைக்கண்ட பிரபாகரன், சிறுவனை தாக்கியபோது ஆகாஷ் தட்டிக்கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபாகரன், அவரது நண்பர்கள் மணிபாரதி, பிரதாப் ஆகியோர், ஆகாஷ், மற்றும் அய்யப்பன் என்பவரை சமாதானம் செய்ய அழைத்தனர். அங்கு சென்ற ஆகாஷ், அய்யப்பனை, பிரபாகரன் உள்ளிட்ட 3 பேரும் பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் ஆகாஷ், அய்யப்பன் மற்றும் தடுக்க முயன்ற விஷ்வநாதன் ஆகியோர் காயமடைந்தனர். கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து பிரபாகரனை கைது செய்து, மணிபாரதி, பிரதாப் ஆகியோரை தேடி வருகின்றனர்.
18-Feb-2025