மேலும் செய்திகள்
பெண் வழக்கறிஞர் - பழநி கோயில் பணியாளர் பிரச்னை
15-Jul-2025
விழுப்புரம்; உயர்நீதிமன்ற நீதிபதி தொடர்ந்த அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறக்கோரி விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு மாநில பொருளாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது உயர்நீதிமன்ற நீதிபதி தொடர்ந்த அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். வழக்கறிஞர்கள் தமிழரசன், சடகோபன் உட்பட பலர் பங்கேற்றனர். திண்டிவனம் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் அட்வகேட் அசோசியேஷன் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் விஜயன், நாகையா, தனபால், முனியாண்டி, அருள்மணி பங்கேற்றனர். விக்கிரவாண்டி விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர் சங்க செயல் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் முருகன், முன்னாள் செயலாளர் வீரவேல், பொருளாளர் ராஜபாண்டியன், துணை தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
15-Jul-2025