மேலும் செய்திகள்
சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு கண்காட்சி
31-Oct-2024
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளவரசன் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். கண்காட்சியில், விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள், சாதனைகள், தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வுகள், சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சட்ட உதவிகள் பெற தகுதிகள் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.மோட்டார் வாகன விபத்து மாவட்ட நீதிபதி வெங்கடேசன், சிறப்பு மாவட்ட நீதிபதிகள் பாக்கியஜோதி, வினோதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரகுமான், கூடுதல் அமர்வு நீதிபதி ராஜசிம்மவர்மன், குடும்ப நல நீதிபதி ஈஸ்வரன்.முதன்மை சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பாராணி, சிறப்பு சார்பு நீதிபதி லட்சுமி, கூடுதல் சார்பு நீதிபதிகள் தமிழ்ச்செல்வன், வரலட்சுமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி முருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் ராதிகா உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
31-Oct-2024