உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி டிரைவர் மாயம் மகன் போலீசில் புகார்

லாரி டிரைவர் மாயம் மகன் போலீசில் புகார்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மல்லி லோடு லாரியில் ஏற்றி வந்த தந்தையை காணவில்லை என மகன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.திருச்சி மாவட்டம், புதுார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 55; இவரும், நாமக்கலை சேர்ந்த கண்ணன் என்பவரும், லாரி டிரைவர்கள். இவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மல்லி லோடு ஏற்றி கொண்டு கடந்த 24ம் தேதி விழுப்புரத்தில் பாதி சரக்கை இறக்கியுள்ளனர்.மீதி சரக்கை புதுச்சேரியில் இறக்குவதற்காக லாரியை ஜானகிபுரம் பைபாஸ் வழியாக ஓட்டி சென்றனர். இங்கு, ரவி தனது வலதுகால் பாதத்தில் கட்டி உள்ளதால் தான் இறங்கி கொண்டு ஊர் செல்வதாக கண்ணனிடம் தெரிவித்து விட்டு இறங்கியுள்ளார். ஆனால், இவர் வீட்டிற்கு செல்லவில்லை. இவரை குடும்பத்தார் விழுப் புரம் உட்பட பல இடங்களில் தேடியும் காணவில்லை.இவரது மகன் அஜித்குமார் புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி