உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாட்டரி விற்ற நபர் கைது

லாட்டரி விற்ற நபர் கைது

கோட்டக்குப்பம்; கோட்டக்குப்பத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தில் லாட்டரி சீட்டு, மூன்று நம்பர் லாட்டரி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி கோட்டக்குப்பம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் கோட்டக்குப்பம் கறிக்கடை சந்தில் சோதனை நடத்தினர். அப்போது, லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் , புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த சுப்ரமணி, 38; எனத் தெரியவந்தது. கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சுப்ரமணியை கைது செய்து, அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை