உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  லாட்டரி சீட்டு விற்றவர் கைது

 லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய் நல்லுார் அருகே லாட்டரி சீட்டு வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மொபட்டை பறிமுதல் செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சரவணம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்தருந்தது தெரியவந்தது. விசாரணையில், கூவாகம் அடுத்த கொரட்டூர், குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 56; என்பது தெரிந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து 1,160 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை