உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

செஞ்சி:சர்க்கரை ஆலையில் இயந்திரம் வெடித்து சிதறியதில், மெஷின் ஆப்பரேட்டர் இறந்தார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாலப்பாடியை சேர்ந்தவர் புருஷோத்தமன், 25. இவர், செம்மேட்டில் தனியார் சர்க்கரை ஆலையில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை, 8:45 மணியளவில் சர்க்கரையும், மொளாசசையும் பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரம் வெடித்தது. இதில், புருஷோத்தமன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார், விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !