பெண் உட்பட 2 பேரை தாக்கியவர் கைது
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, பெண் உள்ளிட்ட, 2 பேரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட வி.புதார் கிராமத்தை சேர்ந்த இந்திரஜித் மகன் ஆனந்தன், 42: இவர் அதே ஊரை சேர்ந்த மகேஸ்வரன், 45; என்பவருக்கு ரூ. 3 லட்சம் கடன் மற்றும் ஒரு பவுன் நகை கொடுத்தார். கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில், இந்திரஜித் பணத்தையையும், நகையையும் மகேஸ்வரனிடம் திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரன் இந்திரஜித்தை கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஆனந்தன் நேற்று முன்தினம் அவரது அக்கா அமுதா வீடான விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டிற்கு வந்தார். அப்போது அங்கு வந்த மகேஸ்வரன், கோர்ட்டில் அவருக்கு எதிராக சாட்சி கூறக்கூடாது என ஆனந்தனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதை தடுக்க வந்த, அவரது அக்கா அமுதாவையும் தாக்கினார். இது குறித்த புகாரில், விக்கிரவாண்டி போலீசார் மகேஸ்வரனை கைது செய்தனர்.