உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நண்பரை தாக்கியவர் கைது

நண்பரை தாக்கியவர் கைது

செஞ்சி: டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். செஞ்சி அடுத்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் நேரு மகன் மணிகண்டன், 27; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சம்பத் மகன் மணிகண்டன், 29; நண்பர்கள். கடந்த 28ம் தேதி இருவரும் பாலப்பாடி டாஸ்மாக்கில் மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நேரு மகன் மணிகண்டனை, சம்பத் மகன் மணிகண்டன் பீர் பாட்டிலால் தாக்கினார்.புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து சம்பத் மகன் மணிகண்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ