வாலிபரை தாக்கிய ஆசாமி கைது
விழுப்புரம்,: வளவனுார் அருகே ராமையன்பளையம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்சமத் மனைவி மும்மு சல்மாபீவி,37; நேற்று இவரின் உறவினரான பனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த யூசப்கான் மகன் சேப்கான்,27; என்பவர், மும்மு சல்மாபீவியின் ஸ்கூட்டியை கேட்டுள்ளார். இவர் தர மறுத்ததால், சேப்கான் பிரச்னை செய்துள்ளார். இதை தடுக்க சென்ற பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ்குமார்,28; என்பவரை, சேப்கான் திட்டி, தாக்கியுள்ளார்.வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து சேப்கானை கைது செய்தனர்.