உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் வி.மருதுாரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான அலுவலர்கள் கடந்த 29ம் தேதி பறிமுதல் செய்தனர்.இது குறித்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.அதில், விழுப்புரம் சாலாமேடு என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்த ராஜ்குமார், 31; என்பவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

m.arunachalam
மே 03, 2025 00:24

ஏதோ பிழைப்பிற்காக செய்திருப்பார். 2000 கோடி போதை பொருள் நபருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது . இருவரும் இந்திய குடிமகன்கள் . உணர்ந்து தெளிவோம் .