உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சைக்கிளில் பதுக்கி வைத்து குட்கா விற்றவர் கைது

சைக்கிளில் பதுக்கி வைத்து குட்கா விற்றவர் கைது

வானூர்; சைக்கிளில் சென்று குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். வானூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வானூர் போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதையெடுத்து, போலீசார் எறையூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, சைக்கிளில் டீ விற்பனை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன், 45; என்பவரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தனர். அதில் அவர், பதுக்கி வைத்து, குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து, 20க்கும் மேற்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !