எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சாவு
செஞ்சி: வயிற்று வலியால் எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அனந்தபுரம் அடுத்த பனமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் தினேஷ், 31; மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த அவர், கடந்த 20ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டார்.உடன், சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார்.அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.